Posts

ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த

ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த ஆற்புத பாலன் இவர் ஆ ஆ ஆனிடை பாவங்கள் போக்கவே பிறந்தார் பரிசுத்தராகவே வாழ்ந்தார். தேவசித்தம் நிறைவேற (2) மனிதருள் மனிதராய் பிறந்தார்...ஆனிடை 1.வானவர் போற்ற தூதர்கள் பாட சாஸ்திரிகள் பணிந்தனரே ஆ ஆ...வானவர் நட்சத்திரம் வானில் தோன்ற ஏரோது முகமே வாட அடிமையின் சாயல் தரித்த (2) பாலனை பணிவோம் வாரீர்..ஆனிடை 2. தித்திக்கும் தீங்கனி மனுவுருவானார் மெத்த அதிசயமே ஆ ஆ உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானம் மனுஷர் மேல் பிரியமுண்டாக (2) வாழ்த்தினர் தூதர்கள் வானில்..ஆனிடை

யார் இவர் ஆரோ யார் இவர் ஆரோ யார்

யார் இவர் ஆரோ யார் இவர் ஆரோ யார் யார் இவர் ஆரோ யார் இவர் ஆரோ யார் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி சயம் ஆனவரோ கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் தூங்கப்புல் அணையோ சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட கானகக் கோனர் காணவர இவர் கர்த்தர் ஆவாரோ Aar ivar aararo Lyrics in English aar ivar aaro aar ivar aaro aar ivar paran vaarththai maamisam aayinar ivaro eer ainthu kunam illaathor polae paarinil or eliya kannikaiyin paalar aanaaro ooril or idamum ukanthida illaiyo seer allaak kutiyir piranthaar athi sayam aanavaro karththathaththuvamo kaannaathu thol mael suttivaikkap palanthunniyo ivar thoongappul annaiyo senaithoothar itho sirappudan paada kaanakak konar kaanavara ivar karththar aavaaro

புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன் புவி ஆளும் மன்னவன் புல் மேடையில் தவழ்கிறார் பார் மீட்டிடும் கதிரவன் கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள் கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால) கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும் ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி) அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puviaalum Mannavan – Lyrics in English Puviaalum Mannavan puvi aalum mannavan pul maetaiyil thavalkiraar paar meetdidum kathiravan kanthai thunnikalil thavalkiraar veennai meetti paattup paadungal kaikal serththu thaalam kottungal 1. namakkoru paalakan ulakil vanthaar namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala) karththaththuvam entum avar tholil irukkum raajaareekam entum avarkkuriyathaakum – puvi 2. eesaayin atimaram thulirththathuvae yaakkopil or velli uthiththathuvae -2 ...

அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய்

அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய் அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய் தோன்றும் யார் இவரோ அன்னை மரி மகவோ பரன் சுதன் மகவோ பாவம் தீர்த்திடும் பாலகனோ 1.ஆன்று காவிலே ஆதாம் ஏவாளும் உண்டு பண்ணின பாவம தீர்க்கவோ மரி மகனாம் மனுவேலனோ பாரில் வந்த எம் பாலகனோ 2. விண்ணின் தூதர்கள் வாழ்த்திப் பாடினார் மண்ணின் மானுடன் மகிழ்வடைந்தார் ஆட்டிடையர் கேட்டு மகிழ்ந்தார் போற்றிடுவோம் துதி சாற்றிடுவோம்

ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய்

ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய் ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய் 1. எங்கும் நிறை ஏக சுதன் தங்குமிடம் சத்திரமோ தூங்க மெத்தை புல்லணையோ மங்கை மரியாள் மடியோ 2. விண்ணோர் குளாம் கூடினரே பண்ணுடன் போற்றி பாடினரே மண்ணில் ஆயர் தேடி சென்றே அண்ணலின் பாதம் பணிந்தனரே 3. மன்னன் ஏரோதுமே கலங்க மன்னவர் மன்னனாய் பிறந்து தன்னுயிரையே தத்தம் செய்த மன்னுயிர் மீட்கும் மா பரனே

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம் அன்பரின் ஜெனிப்பு அதிசயம் அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே மனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாய மகிமை ஜொலித்ததால் ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eena Logathil Yesu Yen Piranthar Lyrics in English eenalokaththil Yesu aen piranthaar eena paavikalai meetka thaan piranthaar aa athisayam aa athisayam anparin jenippu athisayam anparin pirappu athisayam maa makimaiyae maa makimaiyae manukkulam meetta makimaiyae manu uru eduththa makimaiyae maa parisuththar maa parisuththar paraloka maenmai thuranthathaal paaviyin saayal anninthathaal aa allaelooyaa aa allaelooyaa aakaaya makimai joliththathaal aattitaiyar kanndu irasiththathaal

ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி

ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி ராரிராரோ ஆரமுதே ஆரி ராரிராரோ பாதிராவில் குளிர் பனியில் பாலகனாய் பாரில் வந்த பரமனே ஆரிராரிராரோ 1.ஆன்று வார்த்தையில் இருந்த தேவா இன்று மாமிசமாய் வந்தவா என்றும் எங்கள் உள்ளங்களிலே நின்றுமது வரங்களையே நன்று நிரப்பிடும் ஆதிபரா... ஆரிராரோ 2. தூய வானவர் துதி முழங்க தீய பேயினம் கதி கலங்க நேயாயர் மதி துலங்க மாய விண்மீன் ஒளி வழங்க ஈனமாய் குடிலிடை உதித்தவா ... ஆரிராரோ